
அதிகமான இளைஞர்கள் மாட் ரெம்பிட் எனப்படும் சட்டவிரோத மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் ஈடுபடுவதற்கு நண்பர்களின் நெருக்குதல்தான் காரணம் என கண்டறியப்பட்டிருப்பதாக ஸ்ரீஅலாம் துணை போலீஸ் தலைவர் ரோஸ்லான் முகமட் தாஹிர் தெரிவித்தார். தாம் கடந்த மூன்றாண்டு காலமாக ஜொகூர் பாரு, ஸ்ரீஅலாம், கூலாய், ஸ்கூடாய் ஆகிய இடங்களில் 18 வயதுக்கும் 27 வயதுக்கும் க் இடைப்பட்ட 300 பேரிடம் பேட்டி கண்டதாகவும், அதில் 90 விழுக்காட்டினர் நண்பர்களின் நெருக்குதால்தான் தாங்கள் சட்டவிரோத மோட்டார் சைக்கிள் பந்தயங்களில் ஈடுபட்டிப்பதை ஒப்புக் கொண்டுள்ளனர். ஆக இந்த விவகாரத்தில் அரசு, அமலாக்கத் தரப்பு அல்லது குடும்பத்தைக் குறை கூறுவது வீண் என அவர் குறிப்பிட்டார். எனவே, குடும்பத்தின் இதில் கவனம் செலுத்தி பிள்ளைகளுக்கு அறிவுரை கூறும்படி அவர் கேட்டுக் கொண்டார்.



