மக்கள் நடமாட்டத்திற்கு இடையே மஇக உறுப்பினர் ஒருவர் அரசு சாரா இயக்கத்தின் தலைவரைத் தாக்கி, காயப்படுத்திய சம்பவம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாக செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் குணராஜா ஜோர்ஜ் குறிப்பிட்டுள்ளார்.
இம்மாதிரியான அராஜகம் என்பது பட்டப்பகலில் நடப்பது இது நாடா அல்லது காடா என்ற கேள்வியை எழுப்புகிறது.
இந்த நவீன காலத்திலும் பொதுமக்களின் பாதுகாப்புக்கு மிரட்டல் விடும் அநாகரிக நடவடிக்கைகளை இரும்புக் கரம் கொண்டு போலீசார் அடக்க வேண்டுமென குணராஜா கேட்டுக் கொண்டார்.
நாட்டில் சட்டமே தலையானதாகும். அதனைப் புறந்தள்ளி சர்வாதிகார ஆட்சியைக் கையில் எடுத்துக் கொள்ள யாருக்கும் அனுமதியில்லை.
அரசு சாரா இயக்கத்தின் தலைவர் மணிமாறன் எம்ஏசிசியிடம் புகார் தெரிவித்ததை ஏற்றுக் கொள்ளாத சந்தேக நபர், சட்டத்தைக் கையில் எடுத்து நடந்து கொண்டிருப்பதை போலீசார் விசாரணை செய்து பாதிக்கப்பட்டவருக்கு நீதி வழங்க வேண்டுமென குணராஜா கேட்டுக் கொண்டார்.