31.8 C
Kuala Lumpur
Sunday, June 21, 2026

Vetri

போர்க் கப்பல் விவகாரம் தேசிய முன்னணி கவிழும் அபாயம்!

🔥 Views : 6
👁 Reading Now : 30

கடற்படைக்கு 6 போர்க் கப்பல்களுக்கான ஒப்பந்தம் 2011ஆம் ஆண்டில் 900 கோடி ரிங்கிட் விலையில் ஒப்பந்தமானது. அதில் 600 கோடி ரிங்கிட் செலுத்தப்பட்டிருந்தும் இன்னும் அந்தக் கப்பல்களில் எதுவும் வந்து சேரவில்லை. இதில் பல முறைகேடுகள் நடந்துள்ளதாகவும் 1எம்டிபி நிதி முறைகேட்டைப் போலவே இதுவும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று. நம்பப்படுகிறது. இந்நிலையில், இந்த விவகாரத்தை எதிர்க்கட்சிகள் பயன்படுத்தி அம்னோவைக் கவிழ்க்க முனைப்பு காட்டி வருகின்றன. இந்தப் போர்க் கப்பல் விவகாரத்தை எதிர்க்கட்சிகள் அரசியல் ஆயுதமாகப் பயன்படுத்தி அம்னோ தலைவர்கள் மீது களங்கத்தை உருவாக்கி, அடுத்த பொதுத்தேர்தலில் ஆளும் தேசிய முன்னணி தலையெடுக்க முடியாத வகையில் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. 1எம்டிபி நிதி முறைகேட்டை போலவே தேசிய முன்னணிக்கு இந்தப் போர்க்கப்பல் விவகாரம் அவப்பெயரை ஏற்படுத்தும் என்பது நிச்சயம்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles