24.7 C
Kuala Lumpur
Wednesday, June 17, 2026

Vetri

தெலுக் இந்தானில் மஇகா போட்டியிட விருப்பம்

🔥 Views : 5
👁 Reading Now : 59

வரும் பொதுத்தேர்தலில் இதற்கு முன்னர் கெராக்கான் போட்டியிட்ட சில தொகுதிகளை மஇகா கோரும் என்று அதன் தலைவர் டான்ஸ்ரீ எஸ். ஏ. விக்னேஸ்வரன் தெரிவித்தார். 1986 முதல் தெலுக் இந்தானில் போட்டியிட்ட கெராக்கான் இப்போது பெரிக்காத்தான் நேஷனலுக்குத் தாவியுள்ளதால், காலியாகும் அத்தொகுதியில் போட்டியிட மஇகா விண்ணப்பித்திருப்பதாக அவர் குறிப்பிட்டார். மஇகா எப்போதும் அம்னோவையே சார்ந்திருக்கும் என்றும் அதன் காரணமாகவே கேமரன் மலைத் தொகுதியை கடந்த பொதுத்தேர்தலில் விட்டுக் கொடுத்ததாகத் தெரிவித்தார். 2018ஆம் ஆண்டு தேர்தலில் நாடாளுமன்றத்தின் 9 தொகுதிகளில் மஇகா போட்டியிட்டு, இரு தொகுதிகளிலும், 19 சட்டமன்றத் தொகுதிகளில் 3இல் மட்டுமே அது வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது..

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles