24.7 C
Kuala Lumpur
Wednesday, June 17, 2026

Vetri

பக்காத்தான் கூட்டணியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கியது

🔥 Views : 7
👁 Reading Now : 51

பக்காத்தான் கூட்டணியில் பொதுதேர்தலுக்கான தொகுதிப் பங்கீட்டின் பேச்சுவார்த்தை தொடங்கிவிட்டதாக பிகே ஆர் தகவல் பிரிவுத் தலைவர் ஃபாமி ஃபாட்சில் தெரிவித்தார். இதில் முக்கியமாக 2018இல் பெர்சத்து போட்டியிட்ட 52 தொகுதிகள் முக்கிய பங்கு வகிக்கிறது. 2018இல் பிகேஆரின் சார்பில் போட்டியிட்டு வென்று பின்னர், கட்சி மாறியவர்களின் தொகுதிகளான அம்பாங், கோம்பாக், தெப்ராவ், பத்து பகாட், சிகாமாட் ஆகிய தொகுதிகளை பிகேஆர் விட்டுக் கொடுக்காது என்று அவர் தெரிவித்தார். 2020இல் ஷெரட்டன் நகர்வுக்குப் பின்னர் பக்காத்தானில் இருந்த பெர்சத்து சில எம்பிக்கள் விலகிச் சென்றதால், அத் தொகுதிகளில் பக்காத்தானின் உறுப்புக் கட்சிகள் போட்டியிட வாய்ப்பு கிட்டும் என ஃபாமி தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles