24.7 C
Kuala Lumpur
Wednesday, June 17, 2026

Vetri

தே.முவின் வீழ்ச்சிக்கு உங்களைப் போன்றவர்கள்தான் காரணம் நுர் ஜஸ்லானை சாடினார் சரவணன்

🔥 Views : 8
👁 Reading Now : 70

தவறான நம்பிக்கை அல்லது மாயையிலிருந்து வெளியே வாருங்கள் என ஜோகூர் அம்னோ துணைத் தலவரான நுர் ஜஸ்லானை ம.இ.காவின் தேசிய துணைத்தலைவரான டத்தோஸ்ரீ சரவணன் கேட்டுக்கொண்டார். தேசிய முன்னணியின் வீழ்ச்சிக்கு உங்களைப் போன்றவர்கள்தான் காரணமாக இருக்கிறீர்கள் என்றும் நோர் ஜஸ்லானுக்கு அவர் நினைவுறுத்தினார். 15ஆவது பொதுத் தேர்தலில் ம.இ.கா மற்றும் ம.சீ.சவை அம்னோ நம்பியிருக்க முடியாது என நுர் ஜஸ்லான் கூறியிருந்தது தொடர்பில் கருத்துரைத்தபோது மனித வள அமைச்சருமான சரவணன் இதனைத் தெரிவித்தார். நுர் ஜஸ்லான் மாயையில் இருக்கிறாரா ? கடந்த பொதுத் தேர்தலுக்கு பிறகு இதர உறுப்புக் கட்சிகள் தேசிய முன்னணியிலிருந்து விலகிபோதிலும் ம.இ.காவும், ம.சீ.சவும் மட்டுமே அம்னோவுடன் அந்த கூட்டணியில் இருந்ததை நுர் ஜஸ்லான் மறந்துவிட்டாரா என சரவணன் வினவினார்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles