24.7 C
Kuala Lumpur
Wednesday, June 17, 2026

Vetri

ரோஸ்மாவுக்கு விதிக்கப்பட்ட அபராதம் மிகவும் அதிகம்

🔥 Views : 8
👁 Reading Now : 31

சூரியசக்தி மின்சாரத் தயாரிப்பு குத்தகையில் கையூட்டு பெற்ற ரோஸ்மா மன்சோருக்கு விதிக்கப்பட்ட அபராதத் தொகையான 97 கோடி ரிங்கிட் மிகவும் அதிகம் என்று வழக்கறிஞர் ஜக்ஜிட் சிங் குறிப்பிட்டுள்ளார்.
இந்த வழக்கில் ரோஸ்மாவை குற்றவாளி என தீர்ப்பளித்த நீதிபதி முகமட் ஸைனி மஸ்லான், அவருக்கு 10 ஆண்டு சிறையும் 97 கோடி ரிங்கிட் அபராதத்தையும் விதித்து தீர்ப்பளித்திருந்தார்.
நீதிமன்றத்திற்கு வெளியே அது பற்றிக் குறிப்பிட்ட ஜக்ஜிட், இந்த அபராதத் தொகையானது யாரும் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு மிகவும் அதிகம் என குறிப்பிட்டார்.
எனினும், தீர்ப்பினை எதிர்த்து ரோஸ்மா மேல் முறையீடு செய்யவிருப்பதால், தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
ஊழல் தடுப்புச் சட்டத்தின்படி, இக்குற்றத்திற்கு 20 ஆண்டு சிறையும் கையூட்டுத் தொகைக்கு 5 மடங்கு அபராதமும் விதிக்க சட்டம் வகை செய்கிறது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles