நாட்டிலுள்ள நாடற்ற குழந்தைகள் தொழில் ரீதியாக பந்து விளையாடினால்தான் அவர்களுக்குக் குடியுரிமை தரப்படுமா என்று சிகாம்புட் எம்பி Hannah Yeoh (ஹன்னா இயோ) சாடியுள்ளார்.
அண்மையில் பிரிட்டனைச் சேர்ந்த விளையாட்டாளர் பகாங் எஃப்சி பந்து விளையாட்டுக் குழுவிற்கு விளையாடுவதால் அவருக்கு மலேசியக் குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்னர், Mohamadaw Sumare (முகமடாவ் சுமரே) Liridon Krasnikki (லிரிடோன் கிரஸ்னிக்கி) Kuitomaa de pavula (குயிதோமா டெ பவுலா) ஆகியோருக்குக் குடியுரிமை தரப்பட்டுள்ளததாக ஹன்னா தெரிவித்தார்.
5 ஆண்டு ஒப்பந்தத்தில் பந்து விளையாடுவோருக்குக் குடியுரிமை தரும்போது, நாடற்ற பிள்ளைகள் மூத்த குடிமக்களாகும் போது குடியுரிமை வழங்கப்படுமா என பத்து காவான் எம்பி கஸ்தூரி பட்டு கேள்வி எழுப்பியிருந்தார்.