
சரவாக் உட்புறப் பகுதிகளில் சூரியசக்தி மின்சாரத் தயாரிப்புக் குத்தகையில் கையூட்டு பெற்ற ரோஸ்மா மன்சோருக்கு விதிக்கப்பட்ட தண்டனையானது மாநில மக்களுக்கு வழங்கப்பட்ட நியாயமான நீதி என சரவாக் பிகேஆர் இளைஞர் பிரிவுத் தலைவர் Siew Soon Man (சியூ சூன் மான்) குறிப்பிட்டுள்ளார்.
பேராசை பிடித்தவர்கள் வரும் தலைமுறையினரின் நலனை உதறித் தள்ளி, சுய லாபத்தையே கருத்தில் கொண்டதன் பின் விளைவு இது என அவர் குறிப்பிட்டார்.
இந்த ஊழலானது சரவாக் உட்புறப் பகுதிகளில் உள்ள 351 பள்ளிகளு க்கு சூரிய சக்தி மின்சாரத்தைத் தயாரிக்கவும் டீசலால் செயல்படும் இயந்திரங்களைப் பராமரிக்கவும் வழங்கப்பட்ட குத்தகையாகும்.
ஆக, பள்ளிப் பிள்ளைகளுக்கு துரோகம் இழைத்தவருக்கு இந்தத் தண்டனை மிகவும் சரியானதே என்றும் அவர் தெரிவித்தார்.
