26.4 C
Kuala Lumpur
Saturday, April 25, 2026

Vetri

நீதிமன்றத்தில் கண்ணீர் விட்டு அழுத ரோஸ்மா கருணை காட்டும்படி முறையிட்டார்

சூரிய சக்தித் திட்டத்தில் கையூட்டுப் பெற்ற ரோஸ்மா மன்சோர், தண்டனையைக் கேட்டு நீதிமன்றத்தில் கண்ணீர் விட்டு அழுதார்.
நாட்டுக்குத் தாம் ஆற்றய சேவையைக் கருத்தில் கொண்டு நீதிமன்றம் தமக்குக் கருணை காட்டும்படி கதறி அழுதார். இந்த வழக்கில் தாம் பலிகடா ஆக்கப்பட்டதாகவும் தம்முடைய கணவருக்கும் இதே கதிதான் என்று தழுதழுத்த குரலில் அவர் அழுது கண்ணீர் வடித்தார்.
நான் பணம் பெற்றதை யாரும் பார்க்கவில்லை. பணத்தை எண்ணிக் கொண்டிருக்கையிலும் யாரும் பார்க்கவில்லை. அதனால், நான் குற்றவாளி இல்லை என்று அவர் குறிப்பிட்டார்.
ரோஸ்மா குற்றவாளி என்று தீர்ப்பளித்த நீதிபதி, அவருக்கு 10 ஆண்டு சிறையும் 97 கோடி ரிங்கிட் அபராதமும் விதித்த பின்னர், ரோஸ்மா மனம் உடைந்து அரற்றினார்.
ரோஸ்மா அப்பழுக்கற்ற நடத்தை கொண்டவர். நாட்டுக்குச் சேவையாற்றி வருபவர் என்றும் அவருக்குக் கருணை காட்டும்படி வழக்கறிஞர் ஜக்ஜிட் சிங் நீதிபதியிடம் முறையிட்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles