
லண்டனில் பதுங்கி வாழும் குப்பையைக் கிளறி வயிற்றை வளர்க்கும் எழுத்தாளரான Raja Petra Kamarudin (ராஜா பெத்ரா கமாருடின்), கள்ளத்தனமாக வெளியிட்ட செய்தியைப் பயன்படுத்தி, தமது வழக்கை விசாரணை செய்த நீதிபதி முகமட் ஸைனி மஸ்லானை மாற்ற வேண்டுமென ரோஸ்மா வலியுறுத்தியது தமக்கு எதிரான தீர்ப்பை தடுக்கவே என அரசின் வழக்கறிஞர் கோபால் ஸ்ரீராம் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
நேர்மையற்ற ராஜா பெத்ரா, பதுங்கி வாழும் நபர் என்றும் குப்பைக் செய்திகளை எழுதி சம்பந்தப்பட்டவர்களிடம் பணத்தைப் பெறுவதையே பிழைப்பாகக் கொண்டிருப்பதாகவும் அவர் குற்றம் சுமத்தினார்.
அவர் வெளியிட்ட அடிப்படை இல்லாத ஆவணத்தை வைத்துக் கொண்டு நீதிபதியின் நேர்மையின் மீது ரோஸ்மா கேள்வி எழுப்பியது மட்டரகமான செயலென்றும் அவர் குறிப்பிட்டார்.
ரோஸ்மா முதலில் வழக்கறிஞரை நீக்க வேண்டுமென கோரியதில் தோல்வி அடைந்த பின்னர், வழக்கை நடத்தும் நீதிபதியை அகற்ற வேண்டுமெனக் கோரி அதிலும் தோற்றுப் போனதாக கோபால் ஶ்ரீராம் தெரிவித்தார்.
