26.4 C
Kuala Lumpur
Saturday, April 25, 2026

Vetri

எல்சிஎஸ்ஸிந் நிதி முறைகேட்டில் அமைச்சருக்கு சம்பந்தம்: – ரபிஸியிடம் விசாரணை

அமைச்சர் அப்துல் லத்திப் அமாட்டை போர்க் கப்பல் விவகாரத்தில் சம்பந்தப்படுத்தி விமர்சித்து வரும் பிகே ஆர் துணைத் தலைவர் ரபிஸி ரம்லி விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார்.
அப்துல் லத்திப் அது பற்றிய புகாரை அளித்துள்ளதை அடுத்து, ரபிஸி ரம்லி வாக்குமூலம் கொடுக்க அழைக்கப்பட்டுள்ளதாக செந்தூல் மாவட்ட போலீஸ் தலைவர் பே எங் லாய் தெரிவித்தார்.
தமக்கு இரண்டாவது மனைவி இருப்பதாகவும், தமது இரு நிறுவனங்களுக்கு எல்சிஎஸ் கப்பல் திட்டத்தில் துணை குத்தகைகள் கிடைக்க தாம் உதவி செய்து வந்ததாக ரபிஸி தொடர்ந்து குற்றம் சாட்டி வருவதாக லத்திப் புகாரில் குறிப்பிட்டுள்ளார்.
எனவே, இது பற்றி விசாரிக்கும்படி லத்திப் போலீசாரைக் கேட்டுக் கொண்டுள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles