26.4 C
Kuala Lumpur
Wednesday, June 17, 2026

Vetri

வேலை தருவதாக மோசடியைத் தடுக்க ஆசியான் முனைய வேண்டும்

🔥 Views : 8
👁 Reading Now : 68

ஆசியான் நாடுகளில் நல்ல சம்பளத்துடன் வேலை என்று ஆசை வார்த்தை கூறி, அழைத்துச் சென்று, பின்னர் இணையதள மோசடி நடவடிக்கைக்குப் யயன்படுத்தி, தடுத்து வைக்கப்படும் நடவடிக்கை அதிகரித்து வருவதாகக் கவலை தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாய்லாந்து, கம்போடியா, லாவோஸ் ஆகிய நாடுகளில் அவ்வாறு ஆசை வார்த்தை கூறி அழைத்துச் செல்லப்பட்டவர்கள் நூற்றுக் கணக்கானோர் அந்நாடுகளில் சிக்கித் தவிப்பதாக அரசு சாரா இயக்கங்கள் குறிப்பிட்டுள்ளன.
அவர்கள் கொடுமைப் படுத்தப்பட்டு 18 மணி நேரம் வரை வேலை வாங்கப்படுவதாகவும் குற்றம் சொல்லப்படுகிறது.
இம்மாதிரியான விவகாரகங்களில் உள்ளூர் பிரபலங்களே ஈடுபட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அந்நாடுகளில் உள்ள மலேசியா தூதரங்கங்கள் அதில் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாத நிலையில் உள்ளன.
எனவே, ஆசியான் நிலையில் இந்த விவகாரத்தை எழுப்பி, நல்ல தீர்வு காண வேண்டுமென கேட்டுக் கொள்ளப் படுகிறது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles