24.7 C
Kuala Lumpur
Wednesday, June 17, 2026

Vetri

எம்சிஐஎஸ்-லைஃப் காப்புறுதி நிறுவன
முன்னாள் மேலாளர் டி.லோகநாதன் ரிஷிகேச பயணத்தில் பூர்த்தியானார்

🔥 Views : 8
👁 Reading Now : 59

ஆன்மிகம், வர்த்தகம், நிருவாகம் உள்ளிட்ட பல தலங்களில் வழிகாட்டியாகவும் நல் ஆலோசகராகவும் குருவைப் போன்றும் விளங்கிய டி.லோகநாதன் இமயமலை அடிவாரத்தில் அமைந்துள்ள ரிஷிகேஷத்தை நோக்கிய ஆன்மிக பயணித்தின்போது இந்த மண்ணுலக வாழ்வை பூர்த்தி செய்தார் என்று எம்சிஐஎஸ் காப்புறுதி நிறுவனத் தலைவர் முனைவர் ஜி.குணராஜ் தெரிவித்துள்ளார்.

எம்சிஐஎஸ்-லைஃப் காப்புறுதி நிறுவனத்தின் மேலாளராகவும் செயல்பட்ட லோகநாதன், குரு ஞானத்தை நாடி, புது டில்லியில் இருந்து ரிஷிகேசம் செல்லும் வழியில் செப்டம்பர் 6-ஆம் நாள் பூர்த்தியானார்.

அன்னாருக்கான இறுதி மரியாதையும் உடல் தகனமும் ரிஷிகேசத்தில் அமைந்துள்ள அவர்தம் குருசன்னிதானத்திலேயே நாளை செப்டம்பர் 9-ஆம் நடைபெறும் என்றும் அவரின் ஆன்மா சாந்திபெற எல்லாம்வல்ல இறைவனின் திருபாதம் பணிவதாகவும் மக்கள் பிரதிநிதி ஜி.குணராஜ் தெரிவித்துள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles