
சிலாங்கூர், கோலாலம்பூர், பேராக் ஆகிய மாநிலங்களில் வீடு புகுந்து திருடுவதோடு கார்களையும் திருடி வந்த கும்பலைச் சேர்ந்த மூவர் டாமன்சாரா பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பெஸ்தாரி ஜெயாவில் ஆகஸ்டு 29ஆம் தேதி காலை 3 மணியளவில் திருட்டு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போது, மூவர் கைது செய்யப் பட்டதாக கோலா சிலாங்கூர் மாவட்ட போலீஸ் தலைவர் ரம்லி காசா தெரிவித்தார்.
சிசிடிவியின் உதவியோடு அவர்கள் பயன்படுத்திய திருடப்பட்ட காரைப் பின் தொடர்ந்த போலீசார், அவர்களை டாமன்சாரா பகுதியில் காலை 2 மணியளவில் கைது செய்தனர்.
29லிருந்து 37 வயதான அவர்களுக்குப் போதைப்பொருள், கிரிமினல் குற்றப் பதிவுகள் உள்ளன.
அவர்களிடமிருந்து 210,000 ரிங்கிட் பெறுமான இரு லோரிகள், 6 வேன்கள், 3 கார்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
