33.5 C
Kuala Lumpur
Saturday, April 25, 2026

Vetri

சிலங்கூர் வெள்ளத் தடுப்புத் திட்டத்தில் பண ஏய்ப்பு: 6 பேர் கைது

சிலாங்கூரில் மேற்கொள்ளப்பட்டு வரும் வெள்ளத் தடுப்பு கட்டுமானத் திட்டத்தில் பொய்யான தகவலை அளித்து பணத்தைப் பெற்ற சந்தேகத்தின் பேரில் 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
அதில் 30லிருந்து 59 வயதுடைய 4 பெண்களும் அடங்குவர். இன்று அவர்களுக்கான கைது ஆணை பெறப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கால்வாய் அமைப்பதில், செய்யாத வேலைக்கு அவர்கள் ரிம. 9 லட்சத்தைப் பெற்றதாகக் குற்றம் சுமத்தப்பட்டது.
கட்டுமான நிறுவனம் ஒன்றின் செயல்முறை அதிகாரி, ஒர் இயக்குநர், ஒரு கணக்காய்வாளர், ஆகியோர் இரு நிறுவனங்களுக்கு அத்தொகையை அங்கீகரித்ததாகச் சொல்லப்படுகிறது.
அவர்கள் இன்று ஷா ஆலம் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படுவர்..

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles