
15ஆவது பொதுத்தேர்தல் நவம்பர் மாதத்தில் நடத்தப்படும் என யூகிக்கப்படுவதால் அக்கால கட்டத்தில் நாட்டில் பருவமழைக் காலம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அக்கால கட்டத்தில் தேர்தலை நடத்தினால் தளவாடவியல் பிரச்சினையும் சுகாதாரப் பிரச்சினையையும் எதிர்கொள்ள நேரிடும் என சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுடின் எச்சரித்தார்.
நாடு வெள்ள அபாயத்தை எதிர்நோக்கியிருக்கும் வேளையில் பொதுத்தேர்தலை தவிர்ப்பதே நல்லது. வெள்ள காலத்தில் மனிதவளம் அதிகமாககத் தேவைப்படும். மக்களை வெளியேற்றவும், துயர் துடைப்பு மையங்களைப் பராமரிக்கவும் அதிகமானோர் தேவைப்படுவர்.
மேலும், பள்ளிகளும் வாக்களிப்பு மையங்களாகச் செயல்படுட வேண்டி வரும். அக்கால கட்டத்தில் நோய் பரவும் அபாயமும் உள்ளது. எனவே, இச்சமயத்தில் தேர்தலை நடத்தாமல் இருப்பதே எல்லோருக்கும் நல்லது என்று கைரி தெரிவித்தார்.



