
15ஆவது பொதுத்தேர்தலில் பக்காத்தான் ஹராப்பான் கிளந்தானின் 14 நாடாளுமன்றம், 45 சட்டமன்றத் தொகுதிகளிலும் போட்டியிடும் என்று கிளந்தான் தேர்தல் இயக்குநர் டத்தோ Wan Rahim Wan Abdullah) வான் ரஹிம் வான் அப்துல்லா தெரிவித்தார்.
பொதுத்தேர்தலைச் சந்திக்க பக்காத்தான் தயாராகி விட்டது. எங்களின் தேர்தல் இயந்திரம் முடுக்கி விடப்பட்டுள்ளது. எங்களின் ஆதரவாளர்களும் தங்களின் பணியைத் தொடங்கி விட்டனர்.
பக்காத்தான் வேட்பாளர்களின் இறுதிப் பட்டியல் விரைவில் தயாரிக்கப்பபடும் என்றும் இதில் புதிக முகங்கள் அதிகமானோர் களம் இறக்கப்படுவர் என்றும் அவர் தெரிவித்தார்.
கடந்த பொதுத்தேர்தலில் பக்காத்தான் கிளந்தானில் எந்தவொரு தொகுதியிலும் வெற்றி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.



