
நஜிப் ரசாக்கின் உடல் ஆரோக்கியம் பற்றிய விவரங்களை நீதிமன்றத்தில் மட்டுமே தாக்கல் செய்யப்படும் என்றும் அது பொதுவில் அறிவிக்க கடப்பாடு இல்லை என்று சுகாதாரத் தலைமை இயக்குநர் டாக்டர் Noor Hisham Abdullah (நூர் ஹிஷாம் அப்துல்லா) தெரிவித்தார்.
நஜிப்பின் உயர் ரத்த அழுத்தம் அதிகமாக உயர்ந்ததை அடுத்து, நீதிமன்ற உத்தரவின் பேரில் அவர் கோலாலம்பூர் மருத்துவனைக்கு அனுப்பி சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர், தற்போது செராஸ் நிவாரண மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
நஜிப் குணமடைந்த பின்னர், மருத்துவ நிபுணர்களின் ஆலோசனையின் பேரில் அவர் காஜாங் சிறைச்சாலைக்கு அனுப்பி வைக்கப்படுவார் என்று நூர் ஹிஷாம் தெரிவித்தார்.



