
அம்னோ தலைவர் அமாட் ஸாஹிட் ஹமிடி பிரதமரானால் நாட்டில் லஞ்ச ஊழல் தலைவிரித்தாடும் என்பதால் அவர் அப்பதவியை அடையாமல் இருக்கும் பொருட்டு, புதிய சட்டம் இயற்றப்பட வேண்டுமென ஜசெகவின் துணைப் பொதுச் செயலாளர் Liew Chin Tong (லியூ சின் தோங்) வலியுறுத்தியுள்ளார்.
பிரதமர், பேரரசரைச் சந்தித்த பின்னர் பொதுத்தேர்தலின் தேதி இன்னமும் அறிவிக்கப்படாமல் இருக்கும்போது, அதனை ஸாஹிட் மீண்டும், மீண்டும் வலியுறுத்துவார் என்பதால், அவரைத் தடுக்கும் புதிய சட்டம் தேவை என்று அவர் குறிப்பிட்டார்.
அச்சட்டத்தில் பிரதமரின் கால வரம்பு 10 ஆண்டுகள், நாடாளுமன்றத்திற்கு குறிப்பிட்ட கால வரம்பு, அரசியல் நன்கொடை, தொகு மேம்பாட்டு வளர்ச்சி நிதி, சட்டத் துறைத் தலைவர், அரசின் வழக்காடு மன்றத் தலைவர் ஆகியோரின் தனித் தனி பொறுப்புகள் வரையறுக்கபப்ட வேண்டுமென லியூ சின் தோங் வலியுறுத்தியுள்ளார்.
