26.4 C
Kuala Lumpur
Wednesday, June 17, 2026

Vetri

சார்ல்ஸ் சந்தியாகோ கிள்ளான் எம்பியாகத் தொடர வேண்டும்

🔥 Views : 7
👁 Reading Now : 40

கிள்ளான் எம்பி சார்ல்ஸ் சந்தியாகோ தொடர்ந்து இதே தொகுதியில் நீடிக்க வேண்டுமென கிள்ளானில் செயல்படும் பல சீன வர்த்தக இயக்கங்கள் வலியுறுத்தியுள்ளன.
நேற்று ஏற்பாடு செய்யப்பட்ட சந்திப்புக் கூட்டத்தில் பேசிய வர்த்தகத் தலைவர்கள் சந்தியாகோவுக்குப் பதிலாக வேறொருவரை கிள்ளான் தொகுதியில் நியமிக்க தாங்கள் சம்மதிக்கப் போவதில்லை என்று குறிப்பிட்டனர்,
கடந்தாண்டு வெள்ள காலத்தின்போது சந்தியாகோ சிறப்பாகச் செயல்பட்டிருப்பதாகவும் அவர் சீன சமூகத்திற்கு பல்வேறு உதவிகளைச் செய்திருப்பதாகவும், சீன சிங்க நனடத்தையும் அவர் ஏற்பாடு செய்து, வெற்றிகரமாக நடத்தியதாகவும் தெரிவித்தனர்.
வரும் பொதுத்தேர்தலில் அவருக்குப் பதிலாக ஸ்ரீகெம்பாங்கான் சட்டமன்ற உறுப்பினர் Ean Yong Hian Wah (இயன் யோங் வா) என்பவரை ஜசெக நிறுத்தத் திட்டமிடுவதாகச் செய்தி பரவி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles