26.4 C
Kuala Lumpur
Wednesday, June 17, 2026

Vetri

கைரி ஜமாலுடின் போட்டியிடத் தொகுதி இல்லையா?

🔥 Views : 7
👁 Reading Now : 50

15ஆவது பொதுத்தேர்தலில் தாம் எங்கு போட்டியிடுவது என்று தெரியவில்லை என்று சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுடின் தெரிவித்தார்.
தொகுதியை முன்கூட்டியே தெரிய வந்தால், அதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள முடியும் என்று அவர் தெரிவித்தார்.
2008ஆம் ஆண்டிலிருந்து ரெம்பாவ் தொகுதி எம்பியாக அவர் இருந்துவரும் வேளையில், அம்னோவின் உதவித் தலைவர் முகமட் ஹசான் அவரை வேறு தொகுதிக்கு மாறிச் செல்ல வலியுறுத்தியுள்ளார்.
அதனையடுத்து கைரி போர்ட்டிக்‌ஷன், அலோர் ஸ்டார் ஆகிய தொகுதி ஒன்றில் போட்டியிடக்கூடும் என்ற வதந்தி உலவுகிறது.
தாம் நெகிரி செம்பிலான் அல்லது கிள்ளான் பள்ளத்தாக்கு ஆகிய தொகுதிகளில் ஒன்றில் போட்டியிட விரும்புவதாகவும் ஆனால், அந்த முடிவு கட்சியின் தலைமைத்துவமே உறுதி முடிவெடுக்க வேண்டுமென அவர் தெரிவித்தார்.
அம்னோவின் கடந்த தேர்தலில் கைரி, ஸாஹிட் ஹமிடியை எதிர்த்துப் போட்டியிட்டு தோல்வியடைந்த பின்னர், கட்சியின் மேல்மட்டத் தலைவர்கள் அவரை ஓரங்கட்டும் நடவடிக்கை தொடர்வது கண்கூடாகத் தெரிகிறது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles