26.4 C
Kuala Lumpur
Wednesday, June 17, 2026

Vetri

ஜசெக கம்யூனிஸ்ட் சார்புடைய கட்சியா?
அப்துல் ஹாடி அவாங்கின் கூற்று அற்பத்தனமானது!

🔥 Views : 9
👁 Reading Now : 24

ஜசெகவை கம்யூனிஸ்ட் கட்சியாக உருவகப் படுத்திப் பேசியிருக்கும் பாஸ் கட்சித் தலைவர் அப்துல் ஹாடி அவாங்கின் கூற்று இட்டுக் கட்டியது, அற்பத்தனமானது என ஜசெக தலைவர் லிம் குவாங் எங் சாடியுள்ளார்.
சீனாவின் கம்யூனிஸ்டி கட்சி மாநாட்டில் மலேசியா பார்வையாளர்களை அனுப்பியதை ஹாடி அவாங் குறை கூறாதது ஏன் என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
அம்னோ மாநாட்டில் சீன கம்யூனிஸ்ட் தலைவர்களை அழைத்ததை ஹாடி ஏன் கேள்வி கேட்கவில்லை என்றும் குவான் எங் கேள்வி எழுப்பினார்.
ஹாடி அவாங் சந்தர்ப்பவாதி. மலாய்க்காரர்களின் வாக்குகளைக் கவர இன, சமய விவகாரங்களை எழுப்பி அவர் குளிர் காய்வதில் சமர்த்தர்.
ஹாடி அவாங் நாட்டில் குழப்பத்தை உருவாக்கி மலாய்க்காரர்களின் உணர்ச்சியைத் தூண்டி, அமைதியின்மையை உருவாக்கி ஆட்சியைப் பிடிக்க துடியாய் துடிப்பதாக பிகே ஆரின் தகவல் பிரிவுத் தலைவர் Fahmi Fadzil (ஃபாமி ஃபாடில்) சாடினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles