
கட்சியை வழிநடத்த இளைஞர்களுக்கு வழிவிட்டு, மூத்த அரசியல்வாதிகள் அவர்களை வழிநடத்த வேண்டுமென பக்கத்தான் தலைவர் அன்வார் இப்ராஹிம் குறிப்பிட்டுள்ளார்.
தியான் சுவா தம்மைச் சந்தித்து, தற்போதைய எம்பிக்களை புதியவர்களுக்காக அகற்றுவதும் அவர்களை விருப்பம்போல அங்குமிங்கும் மாற்றுவது நியாயம் இல்லையென்றும் அது கட்சியின் சரிவுக்கு வழி வகுக்கும் என எச்சரித்ததாக அன்வார் தெரிவித்தார்.
பழையவர்கள் விலகாவிட்டால், புதியவர்கள் அரசியலில் மேல்பட்டத்திற்கு வர முடியாது என்றும் மூத்தவர்கள் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பின்னர் விலகி, கட்சிக்காகப் பாடுபட வேண்டுமென்றும் அவர் குறிப்பிட்டார்.



