
பொது விவாதத்தை விட பொதுமக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு முக்கியத்துவத்திற்கே முன்னுரிமை தருவதாக இஸ்மாயில் சப்ரி தெரிவித்தார்.
இதற்கு முன்னர் நடந்த இதுபோன்ற பொது விவாதங்களினால் மக்களுக்கு எவ்வித நன்மையும் விளையவில்லை என்று அவர் தெரிவித்தார்.
எதிர்க்கட்சிகள் குறைகளை மட்டுமே பிரதானப் படுத்தும்போது, மக்களின் பிரச்சினைகளைத் திட்டமிட்டு மேற்கொண்டு நடத்தி அவர்களின் வாழ்வு வளம்பெற உறுதி செய்வது ஆளும் கட்சியின் மிகப்பெரிய கடமை என அவர் குறிப்பிட்டார்.
நாடு எதிர்நோக்கும் பிரச்சினைகளை விவாதிக்க முஹிடின் யாசினும், அன்வார் இப்ராஹினும் பிரதமர் பொது விவாதத்தில் கலந்து கொள்ள வேண்டுமென அறைகூவல் விடுத்ததற்கு இஸ்மாயில் மேற்கண்டவாறு பதிலளித்தார்.



