
பெர்சத்துவின் இளைஞர் பிரிவின் நிதி ஒரு மில்லியன் ரிங்கிட்டை முறைகேடு செய்த வழக்கில் சைட் சாடிக் சைட் அப்துல் ரஹ்மான் தற்காப்பு வாதம் புரிய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இத்தீர்ப்பினை அடுத்து சைட் சாடிக், மூடா கட்சியின் தலைவர் பதவியிலிருந்து விலகி, பொதுத்தேர்தலில் போட்டியிடாமல் ஒதுங்க வேண்டுமென இணைய வாசகர்கள் அறைகூவல் விடுத்துள்ளனர்.
எனினும், மூவாரின் முன்னாள் எம்பியான சைட் சாடிக் தாம் பொதுத்தேர்தலில் தமது தொகுதியைத் தற்காத்துக் கொள்ளப் போவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
அதன் முடிவை தொகுதி வாக்காளர்களிடமே விட்டு விடுவதாகக் குறிப்பிட்டிருந்தார்.
இணைய பயனர் ஒருவர், அம்னோ அரசியல்வாதிகள் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படும்போது அவர்களைத் திருடர்கள் என்று அழைக்கப்பட்டனர். அதே வேளையில், உங்கள் மீது குற்றம் சுமத்தப்படும்போது, அது பழிவாங்கும் செயலென்று கூறுவது ஏன் என்றும் கேள்வி எழுப்பினார்.
முதலில் நீதிமன்றம் உங்களை நிரபராதி என்று அறிவித்த பின்னர், தேர்தலில் போட்டியிடுங்கள் என்று குறிப்பிட்டிருந்தார். சிலர் வழக்கைத் தைரியத்தோடு எதிர்கொள்ள வேண்டுமென்று கூறிய வேளையில், சிலர் அவரை கேலியாக நீதிமன்றத் திரளை என விமர்சித்துள்ளனர்.



