
சிலர் கூறுவதுபோல தம்புனில் போட்டியிடுவதால் தமது அரசியல் வாழ்வு அஸ்தமனமாகாது என்றும் அத்தொகுதியை வென்று காட்டுவேன் என்று அன்வார் இப்ராஹிம் சூளுரைத்துள்ளார்.
அத்தொகுதியை வென்று தமது அரசியல் நடவடிக்கைகளை இனி அங்கிருந்தே தொடரப் போவதாகவும் அவர் தெரிவித்தார்.
தம்புன் தொகுதியில் இயற்கை வளமும் சுற்றுலாவுக்கான அத்தனை வசதிகளும் இருப்பதால், அதனை நாட்டின் முக்கிய சுற்றுலாத் தலமாக ஆக்கப் போவதாக அவர் உறுதிபடக் கூறினார்.
இதன் மூலம் இவ்வட்டார மக்களின் பொருளாதார வளர்ச்சி மும்மடங்காக அதிகரிக்கும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.



