26.4 C
Kuala Lumpur
Wednesday, June 17, 2026

Vetri

நஜிப்பிற்கு சாதகமாக இருந்த அபாண்டியின் மீதான விசாரணை என்னவானது?

🔥 Views : 6
👁 Reading Now : 27

எஸ்ஆர்சி வழக்கில் நஜிப் ரசாக் குற்றம் இழைக்கவில்லை என்று முன்னாள் சட்டத் துறைத் தலைவர் Affandi Ali (அபாண்டி அலி) அவருக்குச் சாதகமாக நடந்து கொண்டார்.
ஆனால், டோமி தோமஸ் காலத்தில் நஜிப் குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டு அவருக்கு 12 ஆண்டு சிறைத் தண்டனையும் 21 கோடி ரிங்கிட் அபராதமும் விதிக்கப்பட்டது.
இதன் மூலம் அபாண்டி அலி, நஜிப்பிற்கு ஆதரவாகச் செயல்பட்டு தமது கடமையிலிருந்து தவறி இருப்பதாகக் கூறி, கிள்ளான் முன்னாள் எம்பி Charles Santhiago (சால்ஸ் சந்தியாகோ), அபாண்டி மீது விசாரணை மேற்கொள்ள வேண்டுமென புகார் அளித்திருந்தார்.
அதனைத் தொடர்ந்து, போலீஸார் விசாரணை செய்து 3 மாதம் காலம் ஆகியும் அதன் முடிவை அரசு இன்னமும் வெளியிடாமல் இருப்பதாக கெப்போங் எம்பி லிம் லிப் எங் புகார் கூறியிருக்கிறார். அதன் முடிவை அரசு எப்போது வெளியிடும் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்!

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles