27.5 C
Kuala Lumpur
Wednesday, June 17, 2026

Vetri

பக்காத்தான் வெற்றி பெற்றால், வடக்குத் தெற்கு நெடுஞ்சாலை டோல் கட்டணம் ரத்து

🔥 Views : 17
👁 Reading Now : 39

15ஆவது பொதுத்தேர்தலில் பக்காத்தான் ஹராப்பான் வெற்றி பெற்றால் வடக்குத் தெற்கு நெடுஞ்சாலையின் டோல் கட்டணம் ரத்து செய்யப்படும் என்று ஜசெக தலைவர் லிம் குவான் எங் அறிவித்தார்.
இதற்கு முன்னர் பக்காத்தானின் 22 மாத ஆட்சி காலத்தில், டோல் கட்டணம் 18 விழுக்காடு குறைக்கப்பட்டதை நினைவுபடுத்திய அவர், அதன் பின்னர் கட்டணம் படிப்படியாகக் குறைக்கும் நடவடிக்கை ஆட்சி கவிழ்ந்ததால் நடைபெறாமல் போனதாகக் குறிப்பிட்டார்.
பேராக், ஜெலாப்பாங்கில் நேற்று முந்தினம் இரவு நடைபெற்ற மக்கள் சந்திப்புக் கூட்டத்தில் பேசும்போது குவான் எங், நாட்டின் பொருளாதாரச் சரிவு, பணவீக்கம், போர்க் கப்பல் கட்டுமானத் திட்டத்தில் ஊழல் போன்றவற்றை வெளிக்கொணர பக்காத்தானுக்கு மக்கள் ஆதரவு தந்து, மீண்டும் ஆட்சியில் அமர வைக்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles