
2020இல் போதைப்பொருள் வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட மலேசியரான ஜி. புனிதன் சிங்கப்பூர் மேல் முறையீட்டு நீதிமன்றத்தினால் விடுவிக்கப்பட்டார்.
2011 அக்டோபர் 12ஆம் தேதி, 28.5 கிராம் டையமோர்பின் போதைப் பொருளை சிங்கப்பூருக்குக் கடத்தியதை அடுத்து, 2020 மே மாதம் மரண தண்டனை விதிக்கப்பட்டது. எனினும், புதிய ஆதாரங்களை ஆய்வில் எடுத்துக் கொண்ட தலைமை நீதிபதி Sundaresh Menon, நீதிபதிகள் Tay Yong Kwang, Andrew Phang ஆகியோர் அடங்கிய அமர்வு அவரின் மரண தண்டனையை ரத்து செய்தது.



