
ஏர் ஆசியா X குழும செயல்முறை அதிகாரியான டான்ஸ்ரீ டோனி பெர்னாண்டஸ் அப்பதவியில் இருந்து நேற்றிலுருந்து விலகுவதாக அறிவித்தார்.
அவர் சுய விருப்பத்தின் பேரில் பதவி விலகுவதாகத் தெரிய வருகிறது. அவருக்குப் பதிலாக வேறொருவர் இன்னும் நியமிக்கப்படவில்லை.
இதற்கு முன்னர், ஜூலை 8ஆம் தேதியிலிருந்து டோனி (58) குழும பொறுப்பு செயல்முறை அதிகாரியாக நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.



