
மலேசிய மாதர்களுக்கு வெளிநாட்டில் பிறக்கும் குழந்தைகளுக்குக் இயல்பான குடியுரிமை, சட்டத் துறைத் தலைவர், வழக்காடு மன்றத் தலைவர் ஆகியோரின் அதிகாரப் பகிர்வு போன்ற விவகாரங்கள் பக்காத்தான் தேர்தல் கொள்கை அறிக்கையில் சேர்க்கப்பட்டுள்ளன.
மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தை நாடாளுமன்றக் கட்டுப்பாட்டில் கொண்டு வரவும் சட்டத் துறைத் தலைவருக்கே எல்லா அதிகாரமும் வழங்காமல், அதனை வழக்காடு மன்றத் தலைவருக்கும் பகிர்ந்தளிக்கும் பரிந்துரையும் சேர்க்கப்பட்டுள்ளது.
மேலும், சட்டத் துறைத் தலைவர் அரசியல் தாக்கம் இல்லாதவராகவும் அவர் நாடாளுமன்றக் கட்டுப்பாட்டில் இயங்கவும் பக்காத்தான் நடவடிக்கை எடுக்கும் என அதன் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.



