25.3 C
Kuala Lumpur
Tuesday, June 16, 2026

Vetri

குறைந்தபட்ச சம்பளத் திட்டத்தை ஒத்தி வைத்ததற்கு எம்இஎஃப் ஆதரவு

🔥 Views : 8
👁 Reading Now : 67

5க்கும் குறைவான ஊழியர்களைக் கொண்டிருக்கும் சிறு நிறுவனங்களுக்கான குறைந்தபட்ச சம்பளத் திட்டத்தை மீண்டும் 6 மாதங்களுக்கு ஒத்தி வைத்திருக்கும் அரசின் முடிவை முதலாளிமார் சங்க கூட்டமைப்பான The Malaysian Employers Federation (MEF) வரவேற்றுள்ளது.
அது பற்றித் தெரிவித்த அதன் தலைவர் Said Husein Said Husman (சைட் ஹுசேயின் சைட் ஹுஸ்மான்), சிறு, நடுத்தர நிறுவனங்கள் தங்களின் நிதி நிலையை சீரமைக்க இந்த ஒத்திவைப்பு உதவும் என்றார்.
மேலும், அடுத்த ஆண்டு வரவிருக்கும் பொருளாதார தாக்கத்தை எதிர்கொள்ளவும் இது உதவும். இது சிறு, நடுத்தர தொழில்துறையைத் தொடர்ந்து நீடிக்கவும், ஊழியர்களை நிலை நிறுத்திக் கொள்ளவும், நிதி நியையை சீரமைத்துக் கொள்ளவும் உதவும்.
குறைந்தபட்ச சம்பளத் திட்டம் கடந்தாண்டு மே 1இல் அமலுக்கு வந்தபோது, சிறு, நடுத்தர தொழில்துறைக்கு உதவ அத்திட்டம் டிசம்பர் 31 வரை ஒத்திவைக்கப்பட்டு, இப்போது அடுத்தாண்டு ஜூலை 1ஆம் தேதி வரை மீண்டும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles