
சீனாவில் கோவிட்டின் பாதிப்பு அதிகரித்து வரும் வேளையில், அந்நாட்டிலிருந்து வரும் பயணிகளுக்குக் கடும் கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டுமென கூச்சிங் எம்பி டாக்டர் Kelvin Yii (கெல்வின் யீ) வலியுறுத்தியுள்ளார்.
அந்நாட்டில் கோவிட்டின் தாக்கம் கவலைக்குரிய வகையில் இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் கவலை தெரிவித்திருக்கும் வேளையில், ஜப்பான், அமெரிக்கா, இத்தாலி, தென் கொரியா, இந்தியா போன்ற நாடுகள் பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளதை அவர் சுட்டிக் காட்டினார்.
மேலும், சுகாதாரத் துறை தலைமை இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லாவும் அது பற்றிய தமது கவலையைத் தெரிவித்துள்ளார்.
எனவே, மற்ற நாடுகளைப் போன்றே மலேசியாவில் கோவிட் பரவலைத் தடுக்க தக்க தடுப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென டாக்டர் கெல்வின் ஈ கேட்டுக் கொண்டார்.



