
பண்ணையில் கோழி வளர்ப்பிற்கு கிலோவுக்கு 6.53 ரிங்கிட் செலவாகும் நிலையில், பண்ணை உரிமையாளர்கள் கிலோவுக்கு 1.30 ரிங்கிட்டையும் சில்லறை வியாபாரிகள் கிலோவுக்கு 1.25 ரிங்கிட்டையும் லாபமாகப் பெறுவதாகப் புள்ளிவிவர இலாகா தலைவர் Uzir Mahidin (உஸிர் மஹிடின்) தெரிவித்தார்.
மேலும், பண்ணையில் கோழி முட்டையின் லாபம் 0.04 காசு என்றும் சில்லறை விற்பனையாளர்கள் முட்டை ஒன்றுக்கு 0.02 காசு லாபம் அடைகின்றனர்.
கோழி வளர்ப்பில் தீவண செலவே அதிகம் என்றும் அது 65.1 விழுக்காடாக இருப்பதாக உஸிர் தெரிவித்தார். தற்போது சாதாரண கோழி கிலோவுக்கு 9.40 ரிங்கிட்டாகவும் சூப்பர் கோழி கிலோவுக்கு 10.40 ரிங்கிட்டாகவும் விற்கப்படுவது குறிப்பிடத்தக்கது.


