
சீனாவில் உருமாறிய கோவிட் நோய் வேகமாகப் பரவி வருவதை அடுத்து, நாட்டிற்கு வரும் அனைத்துப் பயணிகளுக்கும் உடல் வெப்ப பரிசோதனை நடத்தப்படும் என்று சுகாதார அமைச்சர் ஸலிஹா முஸ்தாப்பா தெரிவித்தார்.
சீனாவிலிருந்து வரும் பயணிகளுக்கும் உள்நாட்டுப் பயணிகளுக்கும் கட்டாய உடல் வெப்ப பரிசோதனை மேற்கொள்ளப்படுவதோடு, விமானக் கழிவு நீரும் சோதனைக்கு உட்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
உடல் வெப்பம் அதிகமாக இருப்பவர்களுக்குத் தொடர்ந்து கோவிட் பரிசோதனையும் நடத்தப்பட்டு தனிமைப் படுத்தப்படுவர்.
இந்த முடிவானது அமெரிக்கா, இந்தியா, இத்தாலி, ஜப்பான் போன்ற நாடுகள் அமல்படுத்திய விதிமுறைக்கு இணங்க இருப்பதாக அவர் தெரிவித்தார்.


