
தற்போது அமலில் இருக்கும் குறைந்தபட்ச சம்பளமான 1,500 ரிங்கிட் உயர்ந்து வரும் செலவினத்தைச் சமாளிக்கப் போதுமானதாக இல்லையென்று பினாங்கு மலேசிய தொழிற்சங்க காங்கிரஸின் செயலாளர் கே. வீரையா குறிப்பிட்டுள்ளார்.
கோலாலம்பூர் போன்ற மாநகர்களில் பிள்ளைகள் இல்லாத குடும்பத்திற்கு மாதமொன்றுக்கு 4,500 ரிங்கிட்டும் பிள்ளைகள் உள்ள குடும்பத்திற்கு 6,500 ரிங்கிட்டும் தேவைப்படுவதாக பேங்க் நெகராவின் ஆய்வில் கூறப்பட்டுள்ளது.
அரசின் குறைந்தபட்ச சம்பளம் வாழ்க்கையை நடத்தப் போதுமானதாக இல்லையென்பதால் நாட்டின் சம்பளத் திட்டத்தை அரசு ஆய்வு செய்யவேண்டும். மேலும், 1,500 ரிங்கிட்டை மட்டுமே முதலாளிகள் தராமல் அதற்கு மேலதிகமாக, வாழ்க்கையைச் சமாளிக்கும் வகையில் சம்பளத்தை உயர்த்த தார்மீகக் கடமை அவர்களுக்கு இருப்பதாக வீரையா குறிப்பிட்டார்.


