
சோதனையின்றி காரோட்டும் உரிமம் தரப்படும் என்ற விளம்பரத்தில் பொதுமக்கள் மிகவும் விழிப்பாக இருக்க வேண்டுமென்று சாலைப் போக்குவரத்து இலாகா எச்சரித்துள்ளது.
போலியான ஓட்டுநர் உரிமத்தை அளிக்க ஒரு சட்டவிரோதக் கும்பல் செயல்படுவதாகவும், பொது மக்களிடமிருந்து பணத்தைப் பெற்றுக் கொண்ட பின்னர், அந்தக் கும்பல் தலைமறைவாகி விடுவதாக சாலைப் போக்குவரத்து இலாகா தலைமை இயக்குநர் Zailani Hashim (ஸைலானி ஹாஷிம்) தெரிவித்தார்.
சீன பொம்மை உருவத்தை அடையாளச் சின்னமாகப் பயன்படுத்தும் அந்தக் கும்பலை வலைத்துப் பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.


