
ஷா ஆலமில் உள்ள பிரபல ஜவுளி நிறுவனமான ஜேக்கல் குழுமத்தின் கட்டடத்தில் நிகழ்ந்த தீ விபத்தில் 10 கோடி ரிங்கிட் பெறுமான துணிமணிகள் அழிந்ததாக அதன் நிர்வாக இயக்குநர் Faroz Jakel (ஃபாரோஸ் ஜேக்கல்) தெரிவித்தார்.
இது பெரிய இழப்பு என்றும் தீயானது ஆண்களுக்கான ஆடைப் பகுதியில் ஏற்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது. எனினும், அதற்கான காரணம் ஆராயப்படுகிறது.
அந்த 5 மாடிக் கட்டடத்தில் 19 விற்பனைக் முகப்புகள் உள்ளன. ஜேக்கல் நிறுவன வாடிக்கையாளர்கள் கோலாலம்பூர், பாங்கி, பண்டார் துன் ஹுசேய்ன் ஓன், செராஸ் ஆகிய இடங்களில் உள்ள கிளை நிறுவனங்களுக்குச் செல்ல வேண்டுமென ஃபாரோஸ் ஜேக்கல் கேட்டுக் கொண்டார்.



