
சீனாவில் தலைவிரித்தாடும் கோவிட் பெருந்தொற்றின் காரணமாக நாட்டில் இன்னும் பூஸ்டர் தடுப்பூசியைச் செலுத்திக் கொள்ளாதவர்கள் அதனைச் செலுத்திக் கொள்ள வேண்டுமென கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
44,813,270 முறைக்கான தடுப்பூசி செலுத்தப்பட்டிருக்கும் வேளையில், வெறும் 20,131 பேருக்கு மட்டுமே பின்விளைவுகள் இருப்பதாகப் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்தப் புகார்களும் கடுமையாக இல்லையென்றும் வெறும் தற்காலிகமான காய்ச்சல், தலைவலி, தசைப்பிடிப்பு, களைப்பு போன்றவையாக இருந்துள்ளன. 1,162 பேருக்கு மட்டுமே கடுமையான உடல் உபாதை இருந்ததாகச் சொல்லப்படுகிறது.
எனவே, தற்போது பூஸ்டர் தடுப்பூசியாக ஃபைஸர் மட்டுமே செலுத்தப்படுவதால், பொதுமக்கள் எந்தவித தயக்கமோ அல்லது அச்சமோ கொள்ளாமல் அதனைச் செலுத்திக் கொள்ள முன்வர வேண்டுமென Noor Hishaam (நூர் ஹிஷாம்) கேட்டுக் கொண்டார்.



