
அண்மையில் ஜொகூர் பாருவில் நடந்த 14 வயதுக்கும் குறைவான பெண்களுக்கான வோலிபால் (கைப்பந்து) போட்டியில் கலந்து கொண்ட மலாக்காவைச் சேர்ந்த இரு சிறுமிகளை அவர்களின் பயிற்றுநர் அறைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
இது வேண்டத்தகாத, மன்னிக்க முடியாத செயலென்று இளைஞர், விளையாட்டுத் துறை அமைச்சர் Hannah Yeoh (ஹன்னா இயோ) தெரிவித்த வேளையில், முன்னாள் அமைச்சர் Faizal Azumu (ஃபைசால் அஸுமு), போட்டி விளையாட்டுகளில் இம்மாதிரியான அடாத செயல்களுக்கு இடமில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
விளையாட்டாளர்களுக்கு பரஸ்பர மரியாதை தர வேண்டுமென்பதை பயிற்றுநர்கள் உணர வேண்டுமென அவர் கேட்டுக் கொண்டார்.
இம்மாதிரியான செயல்களை விளையாட்டாளர்கள் புகார் தெரிவித்து நிவாரணம் தேடுவது அவர்களின் உரிமை என்றும் ஹன்னா இயோ குறிப்பிட்டார்.



