
🔊To listen to this news in Tamil, Please select the text.
அம்னோ தலைவர் பதவியில் இருந்து அமாட் ஸாஹிட் ஹமிடியை அகற்றும் திட்டத்தில் தாம் சம்பந்தப்படவில்லை என்று கட்சியின் உதவித் தலைவர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப் வன்மையாக மறுத்துள்ளார்.
அண்மையில் நபர் ஒருவர், ‘லண்டன் நகர்வு’ எனும் ஆலோசனைக் கூட்டத்தில் இஸ்மாயில் சப்ரி உட்பட அம்னோவின் இரு உதவித் தலைவர்கள் கலந்து கொண்டதாகக் குறிப்பிட்டிருந்தார்.
அந்தச் செய்தியில் உண்மையில்லை என்றும் அது தம்மைக் களங்கப்படுத்துவதாக இஸ்மாயில் சப்ரி குறிப்பிட்டிருந்தார்.
கடந்த நவம்பரில், தேசிய முன்னணித் தலைவர்களோடு பாஸ் கட்சியினரும் டுரோப்பிகானா கோல்ஃப் கன்றி ரிசோர்ட்டில் கலந்து கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
