
🔊To listen to this news in Tamil, Please select the text.
கடந்த டிசம்பர் 29ஆம் தேதி, வியாழக்கிழமை இரவு 8.55 மணியளவில், பாண்டான் இண்டாவில் நடந்த குண்டுவெடிப்பில் ஆடவர் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில், 30 வயதுடைய தம்பதியர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று முன்தினம் இரவில், அத்தம்பதியர் கெடாவில் கைது செய்யப்பட்டதாக சிலாங்கூர் இடைக்கால போலீஸ் தலைவர் சசிகலா தேவி தெரிவித்தார்.
அந்தச் சம்பவத்தில் தமது காரின் மேல் வைக்கப்பட்டிருந்த பொட்டலத்தைக் கையாண்டபோது, அதிலிருந்த குண்டு வெடித்ததில், ஆடவர் ஒருவர் படுகாயமடைந்தார். அதில் வெடிப் பொருள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டதாக அம்பாங் ஜெயா ஏசிபி Mohamad Farouk Esha (முகமட் ஃபாருக் எஷாக்) தெரிவித்தார்.
அதில் பாதிக்கப்பட்ட 28 வயது ஆடவர் அம்பாங் மருத்துவனையில் சிகிச்சையின்போது மரணமடைந்தது குறிப்பிடத்தக்கது.
