26.4 C
Kuala Lumpur
Saturday, April 25, 2026

Vetri

போதைப் பொருள் கடத்தல் வழக்கில் மூன்று இந்தியர்களுக்கு மரண தண்டனை

🔊To listen to this news in Tamil, Please select the text.

நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் 685.1 கிராம் போதைப் பொருளைக் கடத்திய குற்றத்தின் பேரில் 3 இந்தியர்களுக்கு ஷா ஆலம் உயர்நீதிமன்றம் மரண தண்டனையை விதித்தது.
சி. பீட்டர் ஏசுதாஸ்(55) வி. காசிநாதன்(43), கே. நாகராஜன்(57) ஆகியோரே மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களாவர்.
தண்டனை விதிக்கப்பட்டவர்கள் குற்றத்தை மறுக்கத் தகுந்த ஆதாரத்தைத் தாக்கல் செய்யவில்லை என்று நீதிபதி Abdul Halim Aman (அப்துல் ஹாலிம் அமான்) குறிப்பிட்டிருந்தார்.
ரவாங், ஜாலான் புக்கிட் பெருந்தோங்கில் உள்ள மாட்டுக் கொட்டடியில், 2018 நவம்பர் 26ஆம் தேதி மேற்கண்ட மூவரோடு எம். ராதாகிருஷ்ணன்(52), எஸ். பாலகுகன்(50) ஆகியோர் 432.5 கிராம் heroin (ஹெரொயின்), 152.6 கிராம் monoacetylmorphine (மோனோசெடில்மோர்பின்) ஆகியவற்றைக் கடத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டது.
அதில் பாலகுகன் தப்பியோடி இன்னும் தலைமறைவாக இருக்கும் நிலையில், போலீஸ் தடுப்புக் காவலில் இருந்த ராதாகிருஷ்ணன் மரணமடைந்துள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles