
🔊To listen to this news in Tamil, Please select the text.
கிளந்தான், கோலா கிராய், கம்போங் லலோ எனுமிடத்தில் 14 லட்சம் ரிங்கிட் மதிப்புடைய 25.5 கிலோ போதைப் பொருளைக் கடத்திய நால்வரைப் போலீசார் வலைத்துப் பிடித்துள்ளனர்.
தப்பியோடிய பெரோடுவா மைவி காரை போலீசார் 200 மீட்டர் தூரம் வரை துரத்திப் பிடித்து, நான்காம் படிவ மாணவர் உட்பட நால்வரைக் கைது செய்ததாக கிளந்தான் போலீஸ் தலைவர் Muhamad Zaki Harun (முகமட் ஸக்கி ஹருண்) தெரிவித்தார்.
கைது செய்யப்பட்டவர்கள் 16இல் இருந்து 30 வயதுடையவர்கள் என்றும் அவர்கள் 7 நாள்களுக்குத் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருள் தாய்லாந்திலிருந்து கொண்டு வரப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது.



