33.5 C
Kuala Lumpur
Sunday, May 31, 2026

Vetri

சபா அரசியல் நெருக்கடியைத் தீர்க்க தகுந்த உயாயம் உண்டு

🔥 Views : 7
👁 Reading Now : 69

🔊To listen to this news in Tamil, Please select the text.

சபாவில் நிலவும் அரசியல் நெருக்கடியைத் தீர்க்க தம்மிடம் அதற்கான உபாயம் இருப்பதாக துணைப் பிரதமர் அமாட் ஸாஹிட் ஹிமிடி குறிப்பிட்டுள்ளார்.
அந்த முடிவை தாம் பிரதமர் அன்வார் இப்ராஹிம், சபா முதலமைச்சர் Hajiji Noor (ஹஜிஜி நூர்) ஆகியோரைச் சந்திக்கும்போது வெளிப்படுத்தப் போவதாக அவர் குறிப்பிட்டார்.
வெளியிலிருந்து நோக்கும்போது இந்தப் பிரச்சினை பெரிதாகத் தெரிந்தாலும், அதனை இலகுவாகத் தீர்க்க முடியும் என்று அவர் தெரிவித்தார். அந்த முடிவானது நாட்டில் நிலைத் தன்மையைக் கருத்தில் கொண்டே தாம் பரிந்துரைப்பதாக அவர் தெரிவித்தார்.
கடந்த வெள்ளிக்கிழமை, சபா முதலமைச்சருக்கு வழங்கி வந்த ஆதரவை தேசிய முன்னணி மீட்டுக் கொள்ளும் என சபா தேசிய முன்னணித் தலைவர் Bung Mokthtar Radin (புங் மொக்தார் ராடின்) அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles