25.3 C
Kuala Lumpur
Sunday, June 7, 2026

Vetri

நான்கு மாதக் குழந்தை கோமாவில், மூன்று மழலையர் பராமரிப்பாளர்கள் கைது

🔥 Views : 7
👁 Reading Now : 23

🔊To listen to this news in Tamil, Please select the text.

கோலா திரெங்கானு, பத்து பூரோக்கில் 4 மாத ஆண் குழந்தை ஒன்று கொடுமைப் படுத்தப்பட்டு, கோமா நிலையில் சுல்தானா Noor Zahirah (நுர் சஹிரா) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளான்.
கடந்த புதன்கிழமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவனுக்கு, உடலில் பலத்த காயமும் மண்டை ஓடு உடைந்து ரத்தமும் உறைந்திருப்பதாக அறிவிக்கப்பட்டது.
குழந்தையின் தகப்பனார் அளித்த புகாரைத் தொடர்ந்து, 22லிருந்து 33 வயதுமிக்க மழலையர் பராமரிப்பு இல்ல ஊழியர்கள் மூவர் கைது செய்யப்பட்டதாகத் திரெங்கானு போலீஸ் தலைவர் Rohaimi Yusof (ரோஹாய்மி யூசோப்) தெரிவித்தார்.
குற்றம் நிரூபிக்கப்பட்டால், குழந்தை பராமரிப்புச் சட்டத்தின் வழி 50,000 ரிங்கிட்டுக்கும் மேற்போகாத அபராதமும் 20 ஆண்டுக்கு மேற்போகாத சிறைத் தண்டனையும் விதிக்கப்படும்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles