
🔊To listen to this news in Tamil, Please select the text.
சபாவின் முதலமைச்சராகப் Hajiji Noor (ஹஜிஜி நூர்) பதவியைத் தொடர பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தமது ஆசியை அளித்துள்ளார்.
நேற்று முன்தினம் சபா அரசியல் தலைவர்களைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்திய அன்வார், இதனைத் தெரிவித்தார்.
இந்நிலையில், தேசிய முன்னணியின் 5 சட்டமன்ற உறுப்பினர்கள் உட்பட போதுமான உறுப்பினர்களின் ஆதரவு தமக்கு இருப்பதாக முதலமைச்சர் ஹஜிஜி குறிப்பிட்டார்.
இதற்கு முன்னர், சபா அம்னோவும் வாரிசானும் இணைந்து புதிய அரசாங்கத்தை அமைக்க முயன்று வந்துள்ளன. எனினும், அம்னோவின் 5 சட்டமன்ற உறுப்பினர்கள் ஹஜிஜி நூருக்கு ஆதரவு தெரிவித்ததை அடுத்து, அந்த முயற்சி தோல்வியில் முடிந்தது.
ஜிஆர்எஸ்ஸும் தேசிய முன்னணியும் ஒற்றுமை அரசாங்கத்தில் அங்கம் வகித்தாலும், சபாவில் அக்கட்சிகளின் மோதல் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.



