
🔊To listen to this news in Tamil, Please select the text.
கூட்டரசு அரசாங்கத்தில் ஒற்றுமை அரசு உருவாகி இருப்பதுபோல சபா மாநிலத்திலும் ஒற்றுமை அரசாங்கம் அமைய வேண்டுமென அம்னோ தலைவர் அமாட் ஸாஹிட் ஹமிடி வலியுறுத்தியுள்ளார்.
சபா பிரச்சினைக்குப் பிரதமர் அன்வார் இப்ராஹிம் செய்து வைத்த சமரசத்தை தாம் வரவேற்பதாகவும் சபாவின் நலனை மனதில் கொண்டு, முதலமைச்சர் அங்கு விட்டுக் கொடுக்கும் போக்கைக் கையாள வேண்டு- மென்று ஸாஹிட் கேட்டுக் கொண்டார்.
அங்கு பல கட்சிகளும் இணைந்த ஒற்றுமை அரசாங்கம் அமைந்தால்தான், சபாவின் அரசியல் கொந்தளிப்பு ஒரு முடிவுக்கு வரும் என்றும் அவர் தெரிவித்தார்.



