31.4 C
Kuala Lumpur
Sunday, May 31, 2026

Vetri

பள்ளிச் சிற்றுண்டிச் சாலைகளில் உணவின் விலை 50 விழுக்காடு அதிகரிப்பு

🔥 Views : 2
👁 Reading Now : 31

🔊To listen to this news in Tamil, Please select the text.

விடுமுறைக்குப் பின் பள்ளிகள் திறக்கப்பட்ட பின்னர், அவற்றின் சிற்றுண்டிச் சாலைகளில் விற்கப்படும் உணவின் விலை 50 விழுக்காடாக அதிகரித்துள்ளதாகப் பெற்றோர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
முட்டை, சமையல் எண்ணெய், சீனி, பால் பவுடர் போன்ற பொருள்களுக்குப் பெரும் கட்டுப்பாடும் அவற்றின் விலை பன்மடங்கும் அதிகரித்துள்ளதே உணவின் விலையேற்றத்- திற்கான காரணமாகும்.
பள்ளி கேண்டீனை நடத்த பல்வேறு செலவினங்களும் அதிகரித்துள்ளதால், உணவின் விலையை அதிகரிப்பதைத் தவிர்க்க முடியாது என சிற்றுண்டிச் சாலை நடத்துவோர் சங்கத் தலைவர் Khairudin Hamzah (கைருடின் ஹம்ஸா) தெரிவித்தார்.
எனவே, இதற்குத் தக்க முடிவை எடுக்க கல்வியமைச்சர் Fadlina Sidek (ஃபட்லினா சீடேக்) எங்களுடன் பேச முன்வர வேண்டுமென அவர் கேட்டுக் கொண்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles